தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு
தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு
UPDATED : ஜூலை 25, 2013 12:00 AM
ADDED : ஜூலை 25, 2013 07:49 AM
சென்னை: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், 12 பேர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 33 பேர், பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ், மாவட்ட அளவில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஐந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு, மாற்றப்பட்டு உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
