மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு கிடைத்தது செம்மொழி அந்தஸ்து
மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு கிடைத்தது செம்மொழி அந்தஸ்து
UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்தார்.
அவர் கூறியதாவது:
இதுவரை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்துள்ளோம். இதில் மேலும் ஐந்து மொழிகள் சேர்க்கப்படுவது நாட்டின் மொழி பாரம்பரியத்தின் செழுமையையும், பன்முகத்தன்மையையும் அங்கீகரித்து கொண்டாடுவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.