UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM
ADDED : ஜூன் 21, 2011 10:06 AM
இந்தியாவின் "டாப் 50" பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எண்ணில் அடங்காத பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றை தரம் பிரித்து பட்டியலிடுவது மிகவும் கடினம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லூரிகள் பெற்ற "ரேங்க்&', வேலைவாய்ப்பு, கல்லூரி உள்கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐ.ஐ.டி., மும்பை, டில்லி, சென்னை ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதில் தமிழகத்தின் அண்ணா
பல்கலை 11வது, திருச்சி என்.ஐ.டி., 12வது, வேலூர் வி.ஐ.டி., 16வது, கோவை பி.எஸ்.ஜி., டெக்., 28வது, மதுரை தியாகராஜர் கல்லூரி 34வது, கோவை அமிர்தா பல்கலை 36வது, சென்னை எஸ்.எஸ்.என்., கல்லூரி 50வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் பத்து இடங்களை பிடித்த கல்லூரிகள்:
1. ஐ.ஐ.டி., மும்பை
2. ஐ.ஐ.டி., டில்லி
3. ஐ.ஐ.டி., சென்னை
4. ஐ.ஐ.டி., கான்பூர்
5. ஐ.ஐ.டி., காரக்பூர்
6. ஐ.ஐ.டி., ரூர்க்கி
7. ஐ.ஐ.டி., கவுகாத்தி
8. பனாரஸ் இந்து பல்கலை, வாரணாசி
9. பிர்லா இன்ஸ்டிடியூட், பிலானி
10. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்.
