நாடு முழுவதும் 5,500 மையங்களில் நீட் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் 5,500 மையங்களில் நீட் தேர்வு நிறைவு
UPDATED : மே 04, 2026 04:26 PM
ADDED : மே 04, 2026 04:30 PM

சென்னை:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே 03) மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 05:20 மணியுடன் நிறைவடைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 30 நகரங்களிலும் மொத்தம் 552 நகரங்களில் சுமார் 5,500 மையங்களில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
