பல்கலை ஆசிரியர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வுக்கு சிபாரிசு
பல்கலை ஆசிரியர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வுக்கு சிபாரிசு
UPDATED : அக் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வு அளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவால் நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் சதா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக பேராசிரியர் சதா தலைமையிலான குழுவை யு.ஜி.சி., அமைத்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த இக்குழு, தனது அறிக்கையை யு.ஜி.சி., சேர்மன் சுகதியோ தொரட்டிடம் அளித்தது.
இதன்படி, உதவிப் பேராசிரியருக்கு புதிய சம்பள விகிதமாக 15 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 39 ஆயிரத்து 100 ரூபாய் வரை என்றும், பேராசிரியர்களுக்கு 37 ஆயிரத்து 400 ரூபாய் முதல் 67 ஆயிரம் ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 70 சதவீத சம்பள உயர்வுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வின் மூலம் 400 பல்கலைக்கழகங்கள், ஆறாயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஐந்து லட்சம் ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு பேராசிரியர் சதா குழு பரிந்துரை செய்துள்ளது.
