UPDATED : ஆக 26, 2023 12:00 AM
ADDED : ஆக 26, 2023 05:24 PM
இதில், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாக குழு தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஜெகதீசன் பங்கேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இரண்டு நாள் நடக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில், நேற்று முன்தினம் 1,194 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நேற்று 1,206 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட து.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அறக்கட்டளை நிர்வாக குழு தலைவர் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது:
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லுாரி 1950ல் துவக்கப்பட்டது. இந்த கல்லுாரியில் பல துறைகள் உள்ளன. மாணவர்கள் விருப்பமுள்ள துறை பாடத்தை தேர்வு செய்து படித்து தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும். இந்தியா அறிவியல் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சந்திரயான் - 3 நிலவில் கால்பதித்த நிகழ்வு, உலக அரங்கில் இந்தியா உயர்துள்ளது என்பதை எடுத்து காட்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலர் துரைகண்ணு மற்றும் கல்லுாரி முதல்வர் முருககூத்தன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
