ஏழு ஆண்டுகளில் 76 விருதுகள்; 11 வயது மும்பை சிறுமி சாதனை
ஏழு ஆண்டுகளில் 76 விருதுகள்; 11 வயது மும்பை சிறுமி சாதனை
UPDATED : ஆக 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நவம்பர் 14ம் தேதி இவ்விருது ஸ்வரளிக்கு அளிக்கப்பட்டால், அது 77வது விருதாக இருக்கும். மும்பையைச் சேர்ந்த இச்சிறுமி, பல துறைகளிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.
ஆனாலும், இசை என்றால் இவருக்கு உயிர். நான்கு வயதில் இசை கற்கத் துவங்கினார். ஏழு ஆண்டுகளில், பல்வேறு இசைப் போட்டிகளில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். இது மட்டுமின்றி, ஆங்கிலம், மராத்தி, சமஸ்கிருதம், ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் விருதுகளை குவித்துள்ளார்.
ஏழு ஆண்டுகளில் நகர, மாவட்ட, மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் 76 விருதுகளை குவித்துள்ளார். தற்போது இவரது பெயர் தேசிய குழந்தை விருதுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இவரது அன்றாட பணிகள் படு சுறுசுறுப்பாக செல்கின்றன.
இவருக்கு இசை கற்பிப்பதற்காக, இரண்டு ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து கற்றுத் தருகின்றனர். மற்றவற்றை கற்றுத்தருவதுஅவரது தாய். சொல்லிக் கொடுப்பதை கெட்டியாக பிடித்துக் கொள்வது ஸ்வரளியின் தனித்தன்மை. சிறு வயதிலேயே ஏராளமான இசை கச்சேரிகள் நடத்தி உள்ளார்.
பள்ளிப் படிப்பிலும் சுட்டி தான். வகுப்பில், எப்போதும் முதலிடம் தான். தற்போது, மதுங்காவில் உள்ள இந்திய கல்வியியல் கழகத்தில் படித்து வருகிறார்.
இப்போது, அவருக்கு பிடித்த பொழுது போக்கு, தனது ஒரு மாத தங்கையை கொஞ்சுவது தான். தனது தங்கைக்கு தானே குருவாக இருக்கப் போவதாக கூறுகிறார் ஸ்வரளி.

