UPDATED : ஆக 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடந்த ஆண்டில் 10,511 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த ஆண்டில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு வராதவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சிலிங்கிற்கு இருந்த இடங்களின் எண்ணிக்கை 66,507. இந்த ஆண்டில் புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் கவுன்சிலிங்கிற்கான இடங்களின் எண்ணிக்கை 82,049 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறும் துணை கவுன்சிலிங்கில் 500 இடங்கள் வரை பூர்த்தியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கவுன்சிலிங் முடிவில்
மொத்தத்தில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருக்கும்.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 4.25 நிலவரப்படி மொத்தம் 82 ஆயிரத்து 49 இடங்களில் 72 ஆயிரத்து 846 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இதில் 41 ஆயிரத்து 624 மாணவர்களும் 31 ஆயிரத்து 222 மாணவிகளும் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். 9203 இடங்கள் காலியாக உள்ளன.
பாடவாரியாக உள்ள காலியிடங்கள் நிலவரம்:
ஏரோநாட்டிக்கல் - 40
ஆட்டோமொபைல் - 7
பயோ டெக்னாலஜி - 276
சிவில் - 49
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 1916
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - 1324
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் - 2321
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் -190
இன்பர்மேஷன் டெக்னாலஜி - 2439
மெக்கானிக்கல் - 204
இதரப் பாடப்பிரிவுகள் -428
திங்கள்கிழமை மாலை கவுன்சிலிங் முடிவில் 8887 இடங்கள் காலியாக இருந்தன. கவுன்சிலிங் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) 2,500 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரம் பேர் வரை கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். எனவே, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவில் சுமார் 8 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும்.

