UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் : மேலூர் கிடாரிபட்டியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது.
இங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி மாணவர்கள் மறியல் செய்தனர். மாணவர்கள் 87 பேர் மீது மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் நேற்று அனைத்து மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. இதனால் கல்லூரி முன்புற செக்யூரிட்டி கட்டட கண்ணாடிகளை கற்கள் வீசி மாணவர்கள் சேதப்படுத்தினர். வி.ஏ.ஓ., அக்பர்சேட், மேலவளவு எஸ்.ஐ., பாஸ்கரன், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

