UPDATED : செப் 26, 2015 12:00 AM
ADDED : செப் 26, 2015 11:02 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்
:
முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4 வரை, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல், அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; அக்., 5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும். என்றாலும், விடுமுறை நாட்களில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
