தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் ரூ.93 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்

அரசு பள்ளிகளில் ரூ.93 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்

அரசு பள்ளிகளில் ரூ.93 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்


UPDATED : ஜன 01, 2010 12:00 AM

ADDED : ஜன 01, 2010 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2010 12:00 AM ADDED : ஜன 01, 2010 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 93.35 லட்சம் ரூபாய் செலவில் புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5.80 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், சாளையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 9.75 லட்சம் ரூபாய் செலவில் 3 வகுப்பறைகள், ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 17.40 லட்சம் ரூபாய் செலவில் 6 வகுப்பறைகள், மலையாண்டிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11.60 லட்சம் ரூபாய் செலவில் 4 வகுப்பறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஜன. 2ம் தேதி திறந்து வைக்கிறார்.


திருப்பூர் ஒன்றியம் பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 17.40 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 வகுப்பறைகள், திருக்குமரன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8.70 லட்சம் ரூபாய் செலவில் 3 வகுப்பறைகள், கெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8.70 லட்சம் ரூபாய் செலவில் 3 வகுப்பறைகள் மற்றும் அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன்றியம் துவக்கப்பள்ளியில் 14 லட்சம் ரூபாய் செலவில் 4 வகுப்பறைகள் என மொத்தம் 93.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வகுப்பறைகளை தங்கம் தென்னரசு திறந்து வைக்கிறார்.


‘நபார்டு’ திட்டத்தின்படி பெரியாயிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகளையும், அதே பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம்(எஸ்.எஸ்.ஏ) சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறைகளையும் திறந்து வைக்கிறார். இதை தவிர, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 22 வகுப்பறைகள் மற்றும் உடுமலை ஒன்றியத்தில் 4 பள்ளிகளில் 44.55 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகளை அமைச்சர் திறந்து வைக்கிறார்.


எஸ்.எஸ்.ஏ., இயக்கத்தின்  இயலாக் குழந்தைகள் மறுவாழ்வு திட்டத்தின்படி,  ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள், காது கேளாத குழந்தைகளுக்கான ‘ஹியரிங் எய்டு’, பள்ளியில் இடைநின்ற குழந்தைகளுக்கு புத்தகப் பைகள், நோட்டு புத்தகங்கள், காலணிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.


பள்ளிகள் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் எஸ்.எஸ்.ஏ., மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us