UPDATED : மே 11, 2011 12:00 AM
ADDED : மே 11, 2011 12:22 PM
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி முறையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. இதற்கு காரணம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படிப்புகளுக்கான கல்விக் கட்டணமும் அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.
தற்போது 500 படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் முறையில் எம்.பி.ஏ., படிப்பு உள்ளிட்ட புதிதாக 48 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் படித்துக்கொண்டிருக்கின்றனர். 68 இடங்களில் புதிதாக ஸ்டடி சென்டர் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த கல்வி மையங்களுக்கு சென்று அட்மிஷன் மற்றும் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்&' என்றார். மேலும் விபரங்களுக்கு: www.annamalaiuniversity.ac.in
