sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சர்வதேச கம்ப்யூட்டர் தேர்வில் மதுரை சிறுமி உலக சாதனை

/

சர்வதேச கம்ப்யூட்டர் தேர்வில் மதுரை சிறுமி உலக சாதனை

சர்வதேச கம்ப்யூட்டர் தேர்வில் மதுரை சிறுமி உலக சாதனை

சர்வதேச கம்ப்யூட்டர் தேர்வில் மதுரை சிறுமி உலக சாதனை


UPDATED : ஆக 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதன் மூலம் பாகிஸ்தான் சிறுமியின் உலக சாதனையை முறியடித்து, உலகின் இளவயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
தமிழக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., ராதாகிருஷ்ணனின் சகோதரர் கே. முனிசாமி, அண்ணா நகரில் வசிக்கிறார். இவரது இளைய மகள் வீணாஸ்ரீ.
எட்டு வயதாகும் இவர், வி.எம்.ஜே., மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். ஞாபகசக்தி மிக்க இவர், 3 வயது இருக்கும்போதே திருக்குறளின் ஆயிரத்து 330 குறள்களையும் ஒரே மூச்சில் ஒப்புவித்தார்.
இதற்காக 2006ல் தேசிய விருது பெற்றார். வீணாஸ்ரீக்கு சாப்ட்வேர் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்தில் சர்வதேச அளவில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் பங்கு பெறும் கம்ப்யூட்டர் பொது அறிவு பற்றிய ஆன்லைன் தேர்வை ஜூலை 26ம் தேதி நடத்தினார்.
இதில் 8 வயதே ஆன வீணாஸ்ரீ கலந்து கொள்ள தனது விருப்பத்தை பில்கேட்சிடம் தெரிவித்தார். சிறுமியின் ஆர்வத்தை மெச்சிய பில்கேட்ஸ் இத்தேர்வில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி வழங்கினார்.
நுழைவுக் கட்டணமாக 125 டாலர் கட்டணத்தை வீணாஸ்ரீ செலுத்தி தேர்வில் கலந்து கொண்டார். பி.இ., எம்.பி.ஏ., எம்சி.ஏ., எம்.இ., போன்ற தொழில்நுட்ப பட்டம பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இத்தேர்வில் இந்தச் சிறுமி ஆர்வத்துடன் கலந்து கொண்டார். தேர்வில் ஆயிரம் மதிப்பெண்ணிற்கு 842 மதிப்பெண் பெற்று உலக அளவில் சாதனை புரிந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமி ஆர்பா கரீம் ரந்தாவா நிகழ்த்திய முந்தைய சாதனைய 8 வயது வீணாஸ்ரீ முறியடித்துள்ளார். இவரது சாதனையைப் புகழ்ந்து பில்கேட்ஸ், உலகில் இளவயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சாதனைக் குழந்தை வீணாஸ்ரீ கூறும்போது, பெரியப்பா ராதாகிருஷ்ணன் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். பெற்றோர் ஊக்கம் அளித்தனர். டான்டெம் இன்ஸ்டிட்யூட் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆசிரியர் ஷாம் அளித்த அளித்த பயிற்சி இந்த உலக சாதனை புரிய வைத்தது என்கிறார். எதிர்காலத்தில் அறிவியலில் விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே வீணாஸ்ரீ லட்சியம்.






      Dinamalar
      Follow us