பல்கலை மானியக் குழுவிடம் ரூ.64 கோடி கேட்கிறது அண்ணா பல்கலை.!
பல்கலை மானியக் குழுவிடம் ரூ.64 கோடி கேட்கிறது அண்ணா பல்கலை.!
UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
11வது திட்ட காலத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டுதல், ஆராய்ச்சிக்குத் தேவையான சாதனங்கள் வாங்குதல் உள்பட பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தத்தப்படும்.
ஆராய்ச்சிக்கான சாதனங்களை வாங்குவதற்கு மட்டும் ரூ.22.78 கோடி நிதி கேட்டுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியிலிருந்து கிண்டி, குரோம்பேட்டை வளாகங்களில் மாணவர்கள் தங்கும் புதிய விடுதிகள் கட்டப்படும். புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக 7.43 நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 10வது திட்ட கால செலவுகள், 11வது திட்ட கால திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபுணர் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது. பத்தாவது திட்ட காலத்தில் ரூ.50 கோடி கேட்ட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.7.61 கோடி நிதிமட்டுமே கிடைத்தது. இந்த முறை, பல்கலைக்கழகத்தின் விரிவாகப் பணிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து கூடுதல் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

