sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்ஜி., கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவி!

/

இன்ஜி., கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவி!

இன்ஜி., கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவி!

இன்ஜி., கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவி!


UPDATED : ஆக 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் மற்றும் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றவர் இவர்.  சென்னை செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சியை சேர்ந்த பிரேமலதாவின் மூத்த மகள் யுவஸ்ரீ (17). இவர் வடகரை அரசு ஆதிதிராவிட நலத் துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த கல்வி ஆண்டில் முடிந்த பிளஸ் 2 தேர்வில் 1018 மதிப் பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிட நலத்துறை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு தேர்விலும் 421 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.


இந்த ஆண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றதற்காக, மாவட்ட கலெக்டரிடம் பாராட்டு பெற்ற இவருக்கு, கல்லூரி படிப்பை தொடரத்தான் வசதியில்லை. இவரது தங்கை, படிக்க வசதியின்றி வீட்டில் இருக்கிறார். தம்பி வடகரை ஆதி திராவிட நலத்துறை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். தந்தை துளசிங்கத்தின் ஆதரவற்ற நிலையில், தாய் மட்டும் தனியார் நிறுவனத்தில் வேலை செசய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது சொற்ப வருமானத்திலும், அரசு உதவியாலும் பிளஸ் 2 வரை படித்த இந்த ஆதி திராவிட ஏழை மாணவிக்கு, கவுன்சிலிங்கில் விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரியில் இடம் கிடைத்தது (கட் ஆப் மார்க் 178.75).


பி.இ., படிக்கும் ஆர்வத்துடன் கல்லூரி கனவுகளை சுமந்த இவருக்கு குறைந்தபட்ச நுழைவுக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை சேசர்த்து ரூ.25 ஆயிரம் வரை வருகிறது. இதைச் செலுத்த வழியின்றி தவித்து வருகிறார். வறுமையின் காரணமாக, படித்தது போதும்; எங்காவது வேலைக்குப் போ என்கிறார் தாய். ஆனால் யுவஸ்ரீயோ இன்ஜினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்து, தனது குடும்பத்தை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருக்கிறார்.






      Dinamalar
      Follow us