UPDATED : செப் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் பிரச்னை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பை ஏற்று, 5ம் தேதி முதல் நடத்தவிருந்த அனைத்து போராட்டங்களையும் விலக்கிக் கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
அரசு கல்லூரிகளை ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்றும் முடிவைக் கைவிட்டு, புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரி வந்தது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அனுப்பியுள்ள முதல்வர் கருணாநிதி, கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்துவது குறித்து தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு நிச்சயமாகப் பரிசீலனை செய்யும். ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பாதிக்கும் எத்தகைய முடிவையும் இந்த அரசு மேற்கொள்ளாது எனக் கூறியுள்ளார்.
முதல்வரின் பதில் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் போராட்டக் குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. முதல்வரின் அறிவிப்புக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

