பல்கலைக்கு தெரியாமல் மாணவர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது!
பல்கலைக்கு தெரியாமல் மாணவர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது!
UPDATED : செப் 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை அண்ணா பல்கலையின் கீழ் எட்டு மாவட்டங்களில் 103 இன்ஜியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஒழுங்கீனம் செய்யும் மாணவர்களை, கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்கிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர், பல்கலை நிர்வாகத்திடம் முறையிடும் போதுதான் சஸ்பெண்ட் செசய்யப்பட்ட தகவலை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பல்கலை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையுள்ளது.
இதைக்கருத்தில் கொண்டு கோவை அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒழுங்கீனம் செய்யும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்வதாக இருந்தால், அதற்கு முன் பல்கலைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின் மாணவர் மீது சரியான குற்றச்சசாட்டு இருக்கும் பட்சத்தில் மட்டுமே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

