ஓ.பி.சி./எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் திறன் அதிகரிப்பு
ஓ.பி.சி./எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் திறன் அதிகரிப்பு
UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களின் கற்கும் திறன் அதிகரித்திருப்பதாக என்.சி.இ.ஆர்.டி. சர்வே தெரிவித்துள்ளது.
2004ம் ஆண்டு முதல் இந்த திறன் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 49 ஆயிரம் மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், நேரம், பின்னம், ஜியாமட்ரி, அளவுகள் ஆகியவை ஒரு மாணவரின் அறியும் திறனுக்கான அளவுகோல்களாக இதில் வைக்கப்பட்டன. மேலும் ஆங்கில வார்த்தைகளோடு பரிச்சயம், எண்கள், பாலினம், ஆங்கிலம் அறியும் திறன் ஆகியவையும் இதில் அறியப்பட்டன.
இந்த சர்வே காட்டும் வினோதமான உண்மை என்னவென்றால் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்களின் திறன்கள் தான் அதிகமாக மேம்பட்டிருக்கிறது. ம.பி., கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களின் திறன்கள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளதாம். குஜராத், கர்நாடகா, டில்லி மாணவர்களின் திறன்கள் பின் சென்றுள்ளன.

