கைடு புத்தகங்கள் காப்பிரைட் மீறல் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு
கைடு புத்தகங்கள் காப்பிரைட் மீறல் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு
UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மூலப் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தி வெளிவரும் கைடு புத்தகங்கள் அந்த மூலப் புத்தகங்களின் விற்பனையை வணிகரீதியாக பாதிக்கின்றன. இது
காப்பிரைட் விதிமீறல் ஆகும் என்று கோரி சான்சலர் மாஸ்டர்ஸ் அண்ட் ஸ்காலர்ஸ் ஆப் தி யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு என்ற கல்விப் புத்தகப் பதிப்பாலர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரடப்பட்டது.
கேள்விகளுக்கு மாணவர்களுக்கு எளிதாகப் புரியும்படி படிப்படியான விடையளிக்கும் முறை அடிப்படையில் கைடு புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. மூலப் புத்தகத்திலிருந்து தியரிகள், விளக்கப்பகுதிககள் கைடு புத்தகங்களில் அப்படியே இடம் பெறுதாகக் கூறமுடியாது. எனவே, கைடு புத்தகங்கள் காப்பிரைட் விதிமுறைகளை மீறியதாகக் கருதமுடியாது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவிந்திர பட் தீர்ப்பளித்தார்.
