UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
தற்போது இதில் நடைமுறை சிரமங்கள் தோன்றுகின்றன.
அதாவது கல்லூரி வகுப்பு நேரமும், சி.ஏவின் இன்டர்ன்ஷிப் நேரமும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இது போன்ற மாணவர்கள் சி.ஏ. இன்டர்ன்ஷிப் செய்வதற்கு கல்லூரியிலிருந்து தரப்பட வேண்டிய ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட கல்லூரி முதல்வர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிகளிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் ஐ.சி.ஏ. ஐ. என்னும் அகில இந்திய சி.ஏ. கல்வி நிறுவனம் இது போன்ற முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள் பொதுவாக பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதலின் பேரில் அமைவன.
ஆனால் ஐ.சி.ஏ.ஐ. இதற்கேற்ப நேரங்களை மாற்ற மறுப்பதால் இதனை ஏற்கனவே படிக்கத் துவங்கிய மாணவர்கள் பாதி வழியில் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். சில கல்லூரிகள் மட்டுமே இலகுத் தன்மை வாய்ந்த வகுப்பறை நேரங்களை ஒதுக்குகின்றன. தற்சமயம் ஐ.சி.ஏ.ஐ. இன்டர்ன்ஷிப் வகுப்புக்கான நேரம் காலை 11 மணி என அறிவித்துள்ளதால் பல மாணவர்கள் பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்ற வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
