தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடம் காணப்படும் மந்தமாகக் கற்கும் தன்மை

மாணவர்களிடம் காணப்படும் மந்தமாகக் கற்கும் தன்மை

மாணவர்களிடம் காணப்படும் மந்தமாகக் கற்கும் தன்மை


UPDATED : செப் 26, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


அசாம், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒரிசா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.


இதில் ஆர்வத்துடன் கற்கும் தன்மை, மந்தமாகக் கற்கும் தன்மை, இயந்திரத்தனமாகக் கற்கும் தன்மை, வகுப்பறைக் கவனம், பொதுவாக பிற நடவடிக்கைகளில் கவனம் ஆகியவை அறியப்பட்டன. வகுப்பறையில் மாணவர்கள் உட்காரும் 23 சதவீத நேரத்தில் மட்டுமே ஆர்வத்துடன் கவனமாக கற்பதாக அறியப்பட்டது.


இந்த ஆர்வமாகக் கற்கும் தன்மையானது சுயமாகப் படித்தல், கவனித்தல், சக மாணவர்களிடமிருந்து அறிதல், பாடம் தொடர்பான குறிப்பிட்ட பணிகளை முடித்தல், சந்தேகங்களை எழுப்புதல் போன்றவற்றிலிருந்து அறியப்படுகிறது.


மாணவர்களின் 10 முதல் 17 சதவீத நேரமானது எந்திரத்தனமான செயல்களான மனப்பாடம் செய்தல், சப்தமாக படித்தல், பார்த்து எழுதுதல் ஆகியவற்றில் செலவிடப்படுகிறது.


மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் ஹரியானாவில் தான் ஆர்வமாகக் கற்பது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. ஒரிசாவில் தான் அதிகமாகக் காணப்படுகிறது. பாடங்களைப் பொறுத்தவரை கணித பாடத்தில் தான் ஆர்வமாகக் கற்பது அதிகமாகக் காணப்படுகிறது. மந்தமாகக் கற்பது மொழிப் பாடங்களில் தான் அதிகமாக அறியப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us