தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் கீழ் 127 சமுதாயக் கல்லூரிகள்!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் கீழ் 127 சமுதாயக் கல்லூரிகள்!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் கீழ் 127 சமுதாயக் கல்லூரிகள்!


UPDATED : அக் 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன்மூலம் பள்ளிப்படிப்பை இடையிலேயே விட்டு விட்ட மாணவர்கள் தொழிற் கல்வி பயிலவும் மேலும் படித்து பட்டங்களைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி கல்வி மலருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


படிப்பைத் தொடர இயலாமல் படிப்பை இடையில் நிறுத்திய ஏழை மாணவர்கள் ஏழை மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான தொழில் பயிற்சிகளை அளிப்பதில் சமுதாயக் கல்லூரிகள் சிறந்த பணியாற்றி வருகின்றன. சமுதாயக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சமுதாயக் கல்லூரியில் படிக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


துணைவேந்தர் பழனிச்சாமி மேலும் கூறியதாவது:


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் 1.7 லட்சம் பேர் படித்து வருகிறார்கள். 74 படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஊனமுற்ற மாணவர்களுக்குக் கல்வி வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பி.எட். சிறப்புக் கல்வி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பி.ஏ., பயன்பாட்டுத் தமிழ் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.


என்.ஜி.ஓ. மேனேஜ்மெண்ட் என்ற ஆறு மாத சான்றிதழ் படிப்பு தமிழில் தரப்படுகிறது. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சர்வீசிங், டிப்ளமோ இன் அனிமேஷன், டிப்ளமோ இன் மல்டிமீடியா, டிப்ளமோ இன் ஹோம் அப்ளையன்சஸ் ரிப்பேர் அண்ட் சர்வீசிங் போன்ற தொழில் படிப்புகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.


எம்.ஏ., சோஷியல் ஒர்க், எம்.ஏ., டூரிஸம் அண்ட் டிராவல் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிக் ரிலேஷன், டிசாஸ்ட்டர் மேனேஜ்மெண்ட், ரூரல் டெவலப்மெண்ட் அட்மினிஸ்ட்ரேஷன், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் வளங்குன்றா வளர்ச்சி, அறிவுசார் சொத்துரிமை ஆகிய துறைகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளும் அடுத்த ஆண்டில் புதிதாகத் தொடங்கத் திட்டமிடப்படுகின்றன.


பி.பி.ஏ., ரீடெயல் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ., ரீடெய்ல் மேனேஜ்மெண்ட் புதிய படிப்புகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதழியல் தொடர்பான இரு படிப்புகளைக் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.


திறந்தநிலைக் கல்வி மூலம் தொடங்கப்பட்டுள்ள படிப்புகளுக்குத் தேவையான பாடங்ளுக்கான விரிவுரைகளை சி.டி., மூலம் மாணவர்களுக்கு வழங்குவதற்கு பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. இதுவரை 80 பாடங்களுக்கான விரிவுரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


மற்ற பாடங்களுக்கும் விரிவுரைகளைப் பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விரிவுரைகள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்திலும் இடம் பெறும். மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வீடியோ கான்பரசிங் முறையைப் பயன்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை, சேலம், வேலூர், கோவை, கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கைதிகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் படித்து வருகிறார்கள். இதனால், அந்த சிறைக் கைதிகள் தங்களது தண்டனைக் காலம் முடிந்த பிறகு, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இந்த தொழில் பயிற்சியும் படிப்புகளும் உதவியாக இருக்கும்.


சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர வளாகம் அமைக்கப்பட உள்ளது. இரண்டே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த வளாகத்தில் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. முதல் கட்ட கட்டடப் பணிகள் ஓராண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் பழனிச்சாமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us