தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டம் வருகிறது!

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டம் வருகிறது!

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டம் வருகிறது!


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளிநாட்டுக் கல்வி நிலையங்களை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்படும்.


இந்த சட்டமுன்வடிவிற்கு 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த போதிலும்கூட, நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்வடிவு இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த புதிய சட்டத்தின் மூலம், நமது நாட்டில் செயல்படும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் செயல்படும் அனைத்து வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் போல கருதப்படும். எனவே, மற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைப் போல, இவையும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரம்பிற்குள் வரும்.

அத்துடன் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் காப்பு நிதியாக ரூ.10 கோடிக்குக் குறையாத தொகையை பராமரித்து வர வேண்டும் என்பதற்கான உத்தரவாதம் பெறப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து மதிப்பீட்டுச் சான்றிதழையும் பெற வேண்டும் என்று அச்சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்களது சொந்த நாட்டில் எத்தகையத் தரத்தில் படிப்புகளை நடத்துகின்றனவோ அதே தரத்தில் இங்கும் நடத்துவதற்கு அந்தக் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் இந்தச் சட்டமுன்வடிவு வலியுறுத்தியுள்ளது.


வெளிநாட்டுக் கல்வி நிலையத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விதிவிலக்கு அளித்தால் தவிர, அந்த வெளிநாட்டுக் கல்வி நிலையத்தை நமது நாட்டில் தொடங்குவதற்கு 51 சதவீதத்திற்குக் குறையாமல் அந்தக் கல்வி நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனத்தை உருவாக்கவும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அந்தக் காப்பு நிதியில் 75 சதவீத நிதிக்கு மேல் எடுத்துப் பயன்படுத்தக்கூடாது.


மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்தச் சட்டத்தையோ அல்லது இந்தியாவில் நடைமுறையில் உள்ள வேறு சட்டங்களையோ இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மீறினால், அந்தக் கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வாபஸ் பெறப்படும்.


உயர்கல்வியில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இந்த சட்டமுன்வடிவு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வருகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கியுள்ள நிலையில் இந்த சட்ட முன்வடிவைக் கொண்டு வருவதற்கான பணிகள் மீண்டும் நடைபெறுகின்றன.


தற்போதைய மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவை அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி, இந்த சட்டமுன்வடிவை ஏற்கெனவே எதிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசிக் கூட்டத் தொடரில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவைக் கொண்டு வர மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us