தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் சட்டக் கல்லூரி விவகாரம்: பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி விவகாரம்: பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி விவகாரம்: பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
வேலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, ஆறு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் தனியார் சட்டக் கல்லூரியைத் துவங்குவதற்காக தமிழக அரசின் ஆட்சேபணை இல்லா சான்றிதழ் வழங்கக் கோரி, வேலூரில் உள்ள ஸ்ரீ சுவர்ண விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை என்றும் கூறி, இந்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.
இதை எதிர்த்து சுவர்ண விநாயகர் கல்வி அறக்கட்டளை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘தனியார் கல்லூரிகளுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும்’ என கோரினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான சீனியர் வக்கீல் என்.ஆர்.சந்திரன், ‘விதிமுறைகளை வகுப்பதைக் காரணம் காட்டி மனுதாரர் கல்லூரி துவங்குவதை தடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
வேலூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரியில், இந்திய பார் கவுன்சில் விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பது குறித்து, இந்திய பார் கவுன்சில் ஆய்வு செய்து ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
பார் கவுன்சில் ஆய்வு செய்து உத்தரவிட்டாலும், மாநில அரசின் ஆட்சேபணை இல்லா சான்றிதழ் இல்லாமல், மனுதாரர் கல்லூரி துவங்க முடியாது. இந்த பிரச்னை சம்பந்தமாக பார் கவுன்சில் முடிவை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழக அரசு விதிமுறைகளை வகுத்து இருப்பதால், மனுதாரரின் கோரிக்கைகளைச் சட்டப்படி பரிசீலித்து எட்டு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us