தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
தமிழகத்தில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,800க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களை முறையாக பணி நியமனம் செய்வதற்கான சிறப்புத் தேர்வு, சென்னையில் ஆறு மையங்களில்  நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், பி.எட்.,  தகுதி பெறாத நபர்களுக்கு கம்ப்யூட்டர்  ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பி.எட்.,  தகுதி பெற்றுள்ள கம்ப்யூட்டர்  ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் விசேஷ அனுமதி கோரும் மனு தொடர்ந்தனர். மனுதாரர்கள் தரப்பில் நளினி சிதம்பரம் ஆஜர் ஆனார்.
தமிழகத்தில் 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ள தமிழக அரசு, இட ஒதுக்கீடு அடிப்படையில் அவற்றை மேற்கொள்ளவில்லை,  கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களை அரசு ஊழியர்களாக கருத முடியாது. இதன் மூலம், மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை அக். 13ம் தேதி தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம்  மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, உயர்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கு விசாரணை முடிவைப் பொறுத்து நியமனம் இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த  ஐகோர்ட், பி.எட்., தகுதியின் அடிப்படையிலேயே  கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேர்வு  செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது, ஐகோர்ட் டிவிஷன்  பெஞ்ச்  தனிநீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்த மனு தான் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us