கோவையில் கேட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை 27% அதிகரிப்பு!
கோவையில் கேட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை 27% அதிகரிப்பு!
UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அதேபோல கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் இத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வருகிற நவம்பர் 16ம் தேதி நடைபெறும் கேட் தேர்வு எழுத 2.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம். அதாவது கடந்த ஆண்டில் 2.3 லட்சம் பேர் கேட் தேர்வை எழுதினார்கள்.
இந்த ஆண்டு ஒரு இடத்திற்கு 170 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஐ.ஐ.எம்.,களில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டில் லக்னோ, புனே, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலிருந்து அதிகமான மாணவர்கள் கேட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கோவையில் கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. புனே மையத்திலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்கிறார் அகமதாபாத் ஐ.ஐ.எம்., மாணவர் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் சதீஷ் தேவ்தர்.
டெல்லி, லக்னோ மையங்களில் தேர்வு எழுத இந்த ஆண்டு 60,375 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். டெல்லி மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் லக்னோ மையத்தில் கேட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்று லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம்., மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சாஜி நாயர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடம் கேட் தேர்வு குறித்த பாப்புலாரிட்டி அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் உள்ள பல பி-ஸ்கூல்கள் கேட் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு மற்றொரு காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ஷில்லாங் ஆகிய நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில்
மாணவர்களைச் சேர்ப்பதற்காக கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.எம்., தவிர, வேறு சில மேலாண்மை கல்வி நிலையங்களும் மாணவர் சேர்க்கைக்குக் கேட் தேர்வைப் பயன்படுத்துகின்றன.
