அரசு கலைக் கல்லூரிகளிலும் மாணவர் வேலைவாய்ப்பு முகாம்கள்!
அரசு கலைக் கல்லூரிகளிலும் மாணவர் வேலைவாய்ப்பு முகாம்கள்!
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை (Job Fairs) நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நந்தனம், வியாசர்பாடி அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மாநிலத்தின் பிற பகுதியில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் வேறு சில இடங்களிலும் இதுபோன்ற முகாம்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதை அதன் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்றாகக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உயர்கல்வித்துறைச் செயலர் கே. கணேசன் தெரிவித்தார்.
அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் பட்டதாரி மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கலைக் கல்லூரிகளும், அவற்றின் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளும் இணைந்து செயல்படுவதற்கான திட்டத்தை உயர்கல்வித்துறை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பையும் படிக்க முடியும். அடுத்தகட்டமாக, இத்திட்டத்தை அரசு உதவி பெறும் கல்லூரிகளும் செயல்படுத்திப் பார்க்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை (சி.பி.சி.எஸ்.,) கொண்டு வருவது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களின் கருத்தைக் கேட்டுள்ளோம் என்றார் கணேசன்.
