தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவுக்கு இந்திய செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

நிலவுக்கு இந்திய செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

நிலவுக்கு இந்திய செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!


UPDATED : அக் 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீஹரிகோட்டாவில் அக்.22ம் தேதி காலை 6.22 மணிக்கு சந்திராயன்-1 செயற்கைக்கோளை தாங்கிய பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


இதையடுத்து நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்பும் ஆறாவது நாடாக இந்தியா உருவாகியுள்ளது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸி, சீனா, ஐப்பான் ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது.


அத்துடன் சந்திராயன் திட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு வகித்து வரும் மயில்சாமி அண்ணாதுரை தமிழர் என்பதால் நமக்கு கூடுதல் பெருமை.


நிலவுக்குச் செல்லும் ஆளில்லா செயற்கைக்கோளை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) இயக்குநர் மாதவன் நாயர் தெரிவித்தார்.


விண்ணில் 3 லட்சத்து 87 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 15 நாட்களில் சந்திராயன், சந்திரனை வலம் வரும் என்று மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். சந்திரனை 100 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து வலம் வரும் சந்திராயன், சந்திரன் குறித்த ஆய்வுத் தகவல்களை பூமிக்கு அனுப்பும்.


சந்திராயனிலிருந்து மூன் இம்பேக்ட் புரோப் என்ற சாதனம் சந்திரனில் தரையிறக்கப்படும். அது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதுடன், நிலவில் இந்திய தேசியக் கொடியைப் பதிக்கும்.


சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படுத்தையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நிலவுக்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு ரூ.386 கோடி செலவு ஆகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us