தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம்: நிறைவேறியது மசோதா

சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம்: நிறைவேறியது மசோதா

சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம்: நிறைவேறியது மசோதா


UPDATED : அக் 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
‘கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைக்கக் கூடாது, கோல்கட்டாவில் ஏற்கனவே உள்ள மிரி கடல்சார் மையத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து தர வேண்டும்’ என, மார்க்சிஸ்ட்  கம்யூ.,  உறுப்பினர்கள்  கோஷங்களை  எழுப்பினர்.  இதற்கிடையே,  மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு, இந்த மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பாலு பின்னர் கூறியதாவது;
கடல்சார் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் அமைத்திருக்க வேண்டும். இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூ.,  பலத்த எதிர்ப்பு  தெரிவித்தது. இதன் காரணமாக அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, பார்லிமென்ட்  நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைக்க காரணம், உத்தண்டியில் 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளித்துள்ளது தான். மும்பை மற்றும் கோல்கட்டாவில் நிலம் கிடைக்காததால், அங்கு பல்கலைக் கழகத்தை அமைக்க முடியவில்லை.
இந்த மசோதா அடுத்த இரண்டு  தினங்களில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அடுத்த ஓராண்டில் சென்னையில் இதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடல்சார் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், சென்னையில் அமையவுள்ள பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும்.
சென்னையில் அமையவுள்ள கடல்சார் பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசு ரூ.300 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  2,000 மாணவர்களுக்கு, இந்த பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us