தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/69% இடஒதுக்கீடு: இடைக்காலத் தடை வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

69% இடஒதுக்கீடு: இடைக்காலத் தடை வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

69% இடஒதுக்கீடு: இடைக்காலத் தடை வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!


UPDATED : அக் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாய்ஸ் (கன்ஸ்யூமர் கேர்) கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் கே.எம். விஜயன் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பஸ்யாத், முகுந்தகம் சர்மா ஆகியோரங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மண்டல் கமிஷன்  குறித்து 1992ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு மட்டுமே செயல்படுத்தாமல் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரில் கிரீமி லேயர் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுவதைத் தடுக்க வேண்டும். கிரீமிலேயர் யார் என்பதை கண்டறிய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் 93வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று விஜயன் கோரினார்.


கல்வி நிலையங்களிலும் பணிகளிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான 1993ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தின் செல்லுபடியாகுமா என்ற கேள்வி இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான மூவர் பெஞ்ச் விசாரணையில் இருந்து வருகிறது என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எம்.ராவ் தெரிவித்தார்.


இந்த வழக்கில் இடைக்கால தடை வழங்க முடியாது. மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us