அண்ணா நூற்றாண்டு: பாரதியார் பல்கலை. விழாவில் கலாம் பங்கேற்கிறார்
அண்ணா நூற்றாண்டு: பாரதியார் பல்கலை. விழாவில் கலாம் பங்கேற்கிறார்
UPDATED : அக் 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு விழா ஒரு வாரத்திற்குக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலாம் கலந்து கொள்கிறார். மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஏ.ராசா ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
இதையொட்டி நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் கவிஞர்கள் வைரமுத்து, வாலி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
