புதுவை அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு
புதுவை அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு
UPDATED : அக் 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுவையில் 64 அரசு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் 70 ஆயிரம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
பள்ளிகளில் இ-லேர்னிங் முறையை வளர்க்கும் வகையில் புதுவைப் பள்ளிக் கல்வித் துறை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிராண்ட்பேண்ட் இணைப்பு கொடுக்கப்பட்டதும்,. மாணவர்களுக்கு பரஸ்பர உரையாடல் முறை மூலம் கல்வி வழங்க நிபுணர்களை அழைத்து வரும் திட்டமும் உள்ளது என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் ஜி.ராகேஷ் சந்திரா தெரிவித்தார்.
ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இணைய தளம் மூலம் பாடங்கள் கற்றுத்தருவதற்காக அரசுப் பள்ளிகளில் ஸ்டூடியோக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
