திருச்சியில் ஐ.ஐ.எம். அமைக்க இடம்: நிபுணர் குழு பார்வையிட்டது
திருச்சியில் ஐ.ஐ.எம். அமைக்க இடம்: நிபுணர் குழு பார்வையிட்டது
UPDATED : அக் 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மத்திய மனித வளத்துறை அமைச்சக இணைச் செயலாளர் சுனில் குமார், கொல்கட்டா ஐ.ஐ.எம்., இயக்குந்ர சேகர் சௌத்ரி ஆகியோரடங்கிய குழு
திருச்சியில் ஐ.ஐ.எம்., அமைக்கத் தகுந்த இடங்களைப் பார்வையிட்டனர். அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் கே. கணேசன், கலெக்டர் சவுண்டையா ஆகியோரும் உடன் சென்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ஐ.ஐ.எம்., அமைப்பதற்கான 200 ஏக்கர் நிலம், பஞ்சபூர், சேதுரபட்டியில் 157 ஏக்கர் நிலம் ஆகியவற்றை இந்தக் குழு பார்வையிட்டது. இதில் எந்த இடத்தில் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்பதை இக்குழு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடம் பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில், ஐ.ஐ.எம்., எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது முடிவு செய்யப்படும்.
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தை திருச்சியில் விரைவில் தொடங்க வேண்டும் என்று அரசு ஆர்வமாக உள்ளது. இந்த நிலையில், ஐ.ஐ.எம்., அமைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்டதும், அந்த இடத்தில் உரிய கட்டட வசதிகளைச் செய்ய இரண்டு ஆண்டு காலம் ஆகும். அதுவரை, அடுத்த கல்வியாண்டில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.எம்., சொந்த வளாகத்தில் புதிய கட்டட வசதிகளுடன் இயங்கும் வரை தாற்காலிக இடத்தில் செயல்படும்.
