தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு மாற்றமில்லை!

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு மாற்றமில்லை!

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு மாற்றமில்லை!


UPDATED : அக் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்ட முறையே 2009ல் நடத்தப்படும் நுழைவுத் தேர்விலும் தொடரும் என்று இத்தேர்வை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.,) தெரிவித்துள்ளது.


அதாவது முதல் கட்ட தேர்வு அப்ஜெக்ட்டிவ் டைப் முறையிலும் இறுதிக் கட்டத் தேர்வு விரிவான விடை அளிக்கும் முறையிலும் (சப்ஜெக்ட்டிவ்) நடத்தப்படும். 2010ம் ஆண்டில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் புதிய மாற்றங்கள் இருக்கும் என்று சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் 15 சதவீத இடங்களுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்வு, இறுதிக் கட்டத் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.


தற்போது முதல் கட்டத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் முறையிலும் இறுதிக் கட்டத் தேர்வு விரிவான விடை எழுதும் முறையிலும் நடத்தப்படுகிறது. விரிவான விடையை எழுதும் முறையினால், விடைத்தாள்களை உரிய காலத்தில் திருத்தி முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த முறையில் மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு பெரும் மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். அப்ஜெக்டிவ் முறையிலே நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு நிபுணர் குழுவும் பரிந்துரை செய்துள்ளது. எனவே, தற்போதைய முறையில் மாற்றம் செய்து, இந்த இரண்டு கட்ட நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் அப்ஜெக்ட்டிவ் முறையிலேயே நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி. சதாசிவம் ஆகியோரங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சி.பி.எஸ்.இ., கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


இதையடுத்து அகில இந்திய மருத்துவ பல் மருத்துவ நுழைவுத் தேர்வின் முதல் கட்டத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் அளிக்கப்படும் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. அதாவது ஒரு வினாவிற்கான தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இறுதிக் கட்டத் தேர்வில் 120 வினாக்கள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். இதிலும் ஒவ்வொரு வினாவுக்கும் முதல் கட்ட தேர்வைப் போலவே 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதியும் இறுதித் தேர்வு மே 10ம் தேதியும் என்று சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி புதிய முறை கடைப்பிடிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏராளமான மாணவர்கள் சி.பி.எஸ்.இ.யுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விளக்கம் கேட்டனர். இதையடுத்து, 2009ம் ஆண்டில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் எந்த மாற்றமும் இருக்காது. 2010ம் ஆண்டிலிருந்தே புதிய முறை கடைப்பிடிக்கப்படும் என்று சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us