இந்தியாவில் 200 பேரை ஆட்குறைப்பு செய்ய கோல்ட்மேன் சாசே முடிவு
இந்தியாவில் 200 பேரை ஆட்குறைப்பு செய்ய கோல்ட்மேன் சாசே முடிவு
UPDATED : அக் 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாசே நிறுவனத்தில் இந்தியாவில் 2,300 பேர் வேலை பார்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் பெங்களூரிலும் மற்றவர்கள் மும்பையிலும் பணிபுரிகிறார்கள்.
உலக அளவில் 32,500 பேரைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் வால் ஸ்டீட்டில் உள்ள ஐந்து மிகப் பெரிய நிறுவனங்களில், தற்போதும் லாபகரமாக இயங்கும் ஒரே முதலீட்டு நிறுவனம் கோல்ட்மேன் சாசே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனத்தின் இந்த ஆண்டில் முதல் 9 மாதங்களில் வருவாய் 32 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. இதையடுத்தே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை.
