மதிப்பெண் குறைவு என அதே பள்ளி மாணவருக்கு இடம் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் ஆணை!
மதிப்பெண் குறைவு என அதே பள்ளி மாணவருக்கு இடம் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் ஆணை!
UPDATED : நவ 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தாம்பரம் ஏ.எப்.எஸ். கேந்திரிய வித்யாலயா முதல்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், அப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய பெஞ்ச் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளனர்.
பள்ளிகளில் பதினோராம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சேரவும் 10ம் வகுப்பில் எந்த அளவுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதேசமயம் பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்த அளவுக்கு மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்து படிக்க இடமில்லை என்று கூறுவது நியாயமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், அப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு பெற்றோர்களை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதற்கு பள்ளிகளும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டாமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடுத்த உயர் வகுப்புகளில் அந்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்கும் வகையில் பள்ளிகள் உதவ வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பள்ளிகள் நிர்ணயித்துள்ள கட் ஆப் மதிப்பெண்களைவிட குறைவாகப் பெற்றுள்ள மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு உரிய பாடப்பிரிவிலேயே இடம் தர வேண்டும் என பள்ளிகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
சௌரவ் சவுத்ரி என்ற மாணவர் 10ம் வகுப்புத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்று கூறி 11ம் வகுப்பில் சேர இடம் அளிக்க முடியாது என்று கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் கூறிவிட்டது. இது தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கிரிக்கெட்டில் வெற்றி வாகைக் கேடயம் பெற்றுள்ளேன். விளையாட்டில் 5 தங்கப் பதக்கங்களும் 6 வெள்ளிப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். அதேசமயம் பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. நான் படித்த பள்ளியில் 11ம் வகுப்பில் சேர இடம் அளிக்கவில்லை. ஏனெனில், பள்ளி நிர்ணியித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை நான் பெறவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது. எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று மாணவர் சௌரவ் சவுத்ரி தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவுகளைத் தவிர வேறு பாடப்பிரிவுகள் இல்லை. எனவே கணித்தத்துடன் கூடிய அறிவியல் பாடப்பிரிவில் சௌரவ் சவுத்ரிக்கு இடம் அளிக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
