தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பின்தங்கிய வட்டங்களில் 6 ஆயிரம் மாதிரி பள்ளிகள்: மத்திய அரசு திட்டம்!

பின்தங்கிய வட்டங்களில் 6 ஆயிரம் மாதிரி பள்ளிகள்: மத்திய அரசு திட்டம்!

பின்தங்கிய வட்டங்களில் 6 ஆயிரம் மாதிரி பள்ளிகள்: மத்திய அரசு திட்டம்!


UPDATED : நவ 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல் கட்டமாக கல்விரீதியாக பின்தங்கியுள்ள 2,500 வட்டங்களில் இந்த மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்படும். நடப்பு நிதியாண்டிலிருந்தே இத்திட்டம் செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த 9,321 கோடி செலவாகும் என்று மத்திய இணை அமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் தெரிவித்தார்.


மாநில அரசுகள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். 11வது திட்ட காலத்தில் மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் இதற்கான நிதியை அளிக்கும். 12 வது திட்ட காலத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதி நிதியை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


மாநில அரசுகள் புதிய மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து வழங்க வேண்டும். இந்த மாதிரிப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலும் அல்லது ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலும் இருக்கும். எந்த மீடியலத்தில் நடத்துவது என்பது மாநில அரசின் முடிவுக்கு விடப்படும். எனினும் ஆங்கில மொழிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


டில்லி, ராஜஸ்தான், சதீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோராம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால் அந்த ஆறு மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை இத்திட்டப் பணிகள் தொடங்கப்படாது என்று அமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us