UPDATED : நவ 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதனை சமாளிக்கும் விதத்தில் இந்திய அரசும், வெவ்வேறு நாடுகளின் அரசுகளும் வங்கித்துறையில் நிதிமூலதனத்தை அதிகப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகின்றன. இதனால் இவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிகிறது. தற்போதைய நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஐ.எம்.எப்., உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையைச் சார்ந்த பல்வேறு அமைப்புகள் உலக வளர்ச்சி நிர்ணயங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்று ஐ.எல்.ஓ., எச்சரித்துள்ளது. வறுமைக்கோட்டிற்குக்கீழே செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வரும் 2010க்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் இந்த அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இவற்றை எல்லாம் மீறி, 2009க்குள் உலகெங்கும் 2 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. இது மட்டுமன்றி உலகெங்கும் உள்ள 4 கோடி தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் இந்திய மதிப்பில் ரூ.48க்கும் கீழ் சென்றுவிடும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
