தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தடை!

கம்ப்யூட்டர் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தடை!

கம்ப்யூட்டர் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தடை!


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரங்கன், மிருணாளினி உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். சிறப்புத் தேர்வு நடத்தி கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 12ம் தேதி சிறப்புத் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது.


எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. எனவே, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து சிறப்புத் தேர்வு எழுத அனுமதி பெற்றோம். கணினி ஆசிரியர்களாக எங்களை நியமிக்க தகுதி பெற்றுள்ளோம். எங்கள் தேர்வின் முடிவை அரசு வெளியிடவில்லை.


சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் முடிந்து நியமன உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் பணியாற்றும் பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களை பணியில் இருந்து நீக்க தடை விதிக்கவில்லை என்றால், வேலையை விட்டு அனுப்பிவிடுவர். ஆகையால், எங்களை பணியில் இருந்து நீக்க தடை விதிக்க வேண்டும். நியமன உத்தரவுகளை எங்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


இதை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் செல்வராஜ் வாதாடினார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ரங்கநாயகி நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்.


நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
ஐகோர்ட் உத்தரவுப்படி தேர்வு எழுத மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், தேர்வு முடிவை வெளியிடுவதற்கு முன் அவர்களை பணியில் இருந்து நீக்கி விடலாம் என கருதுவதாகவும் வக்கீல் செல்வராஜ் தெரிவித்துள்ளார். எனவே, மனுதாரர்களின் பணியைப் பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். விசாரணை 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜோதிமணி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us