தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்பு: சென்னை பல்கலை.யிலிருந்து மாற்றம்!

மருத்துவப் படிப்பு: சென்னை பல்கலை.யிலிருந்து மாற்றம்!

மருத்துவப் படிப்பு: சென்னை பல்கலை.யிலிருந்து மாற்றம்!


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பார்மசி உள்ளிட்ட அனைத்து அடிப்படை மருத்துவப் படிப்புகளும் மருத்துவக் கல்வி நிலையங்களிலேயே நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அண்மையில் உத்தரவிட்டது.


இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் நடத்தப்படும் அனாடமி, பிசியாலஜி, பேத்தாலஜி போன்ற துறைகளில் முதுநிலை படிப்புகள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படும். மருத்துவக் கல்வி நிலையங்களில் இந்தப் படிப்புகளை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் இவை மாற்றப்படுகின்றன என்று எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் தெரிவித்தார்.


இதன்மூலம், இதுபோன்ற படிப்புகளை மருத்துவக் கல்வி நிறுவனங்களே தொடங்குவதற்கான கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us