UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இளநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான இந்தப் பாடத் திட்டங்களை சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேஷன் உருவாக்கியுள்ளது.
எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் பாடத்திட்டங்களை வெளியிட்ட சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன், இந்தப் பாடத்திட்டங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுத்துவது குறித்து ஆராய, இந்தப் பாடத்திட்டம் பல்கலைக்கழக கல்வி போர்டிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சில தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவை இந்தப் பாடத்திட்டங்களைத் தங்களது கல்வி நிலையங்களில் செயல்படுத்துவது குறித்து ஆராயும் என்று இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற அந்தக் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோம் சயின்ஸ் படிப்பின் ஒரு பகுதியாக நியூட்ரிஷன் பாடப்பிரிவு இருந்தது. தற்போது தனிப் பாடப்பிரிவாக விரியும் அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மனையியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியூட்ரிஷன் தனிப் பாடப்பிரிவாக நடத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பாடத்திட்டங்களில் நேர்முகப் பயிற்சிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலையில், காலத்திற்கேற்ற புதிய பாடத்திட்டத்தை எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் உருவாக்கியுள்ளது.
