ஒ.பி.சி., காலி இடம்: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கக் கோரி வழக்கு!
ஒ.பி.சி., காலி இடம்: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கக் கோரி வழக்கு!
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதையடுத்து மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஒ.பி.சி.,) இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் எப்படி நிரப்பப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கிரீமிலேயர் முறை முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுகீட்டை மத்திய அரசு அறிவித்தது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களை அடுத்த ஆண்டுக்கும் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. காலி இடங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயருக்கான வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்தி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டது.
இதனால், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுவது தடுக்கப்படுவதாகக் கூறி ஆந்திராவை சேர்ந்த விஸ்வநாத் ரெட்டி என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடத்தில் தனக்கு இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்ஜித் பஸ்யத், அல்டாமஸ் கபீர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோரடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான காலி இடங்கள் எவ்வாறு நிரப்பப்பட்டன என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 27 சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்து பேராசிரியர் பி.வி. இந்திரேசன் தொடர்ந்த மூல வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தனர். 27 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் குறைகின்றன என்று மனுதாரரின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார்.
விசாரணையின்போது நீதிபதி ரவீந்திரன் குறுக்கிட்டுப் பேசியதாவது:
ஒவ்வொரு நூறு இடங்களுக்கும் 54 இடங்கள் கூடுதலாகப்படுகின்றன. அதனால் ஒ.பி.சி., மாணவர் 42 இடங்களையும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 35 இடங்களையும் மீதமுள்ள 77 இடங்கள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் கிடைக்கின்றன. பொதுப் பிரிவு மாணவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். அதை மத்திய அரசு செய்துள்ளது.
100 இடங்களுக்கு 27 சதவீதம் என்று கணக்கிட்டால் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 50.5 இடங்களே கிடைத்திருக்கும். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் 54 இடங்கள் கிடைக்கின்றன.
உங்களது கோரிக்கையை ஏற்றால், 127 இடங்களில் ஓ..பி.சி., மாணவர்களுக்கு 27 இடங்கள் கிடைக்கும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 23 இடங்கள் கிடைக்கும். அதாவது 17 சதவீதம்தான் அவர்களுக்குக் கிடைக்கும். இதனால்தான் இடங்களின் எண்ணிக்கையில் மேலும் 54 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. இதை ஏற்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? என்று நீதிபதி ரவீந்திரன் கேட்டார்.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இடங்களின் எண்ணிக்கையும் ஒ.பி.சி., மாணவர்களுக்கு சதவீத அடிப்படையிலும் கணக்கிடுவது கணக்காகாது என்றார் வழக்கறிஞர் வேணுகோபால்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது நோக்கம் அல்லது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதுதான் என்று நீதிபதி பஸ்யத் தெரிவித்தார்.
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் 54 சதவீத இடங்களை மத்திய அரசு அதிகரித்துள்ளதற்கான நியாயங்களை சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி விளக்கினார். கிரீமிலேயர் முறையை செயல்படுத்தியால் எந்த பொதுப் பிரிவு மாணவருக்கும் அட்மிஷன் மறுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதுகுறித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் நீதிபதி பஸ்யத்.
