தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ‘ஆடியோ சிடி’ திட்டம் அமல்

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ‘ஆடியோ சிடி’ திட்டம் அமல்

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ‘ஆடியோ சிடி’ திட்டம் அமல்


UPDATED : நவ 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில மொழி பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கம் சார்பில், ‘சிம்ப்ளி இங்கிலீஷ்’ என்ற ஆடியோ ‘சிடி’ தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களிடையே ஆங்கில பேச்சு திறமையை வளர்க்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களை வளர்க்கும் நோக்கத்தில், ‘சிம்ப்ளி இங்கிலீஷ்’ என்ற பெயரில் ஆடியோ ‘சிடி’ உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடக்க நிலையிலேயே மாணவர்களிடையே ஆங்கில மொழித்திறனை வளர்க்கும்.
இந்த ஆடியோ ‘சிடி’யில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில், வாணி அக்கா, ராணி அக்கா என்ற இரு கதாபாத்திரங்கள் உரையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு உதவியாக ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் கையேடு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ‘சிடி’ ஆறு தொகுப்புகளை கொண்டுள்ளது. ஒரு ‘சிடி’ தொகுப்பில் பத்து பாடங்கள் உள்ளன. மாணவர்களுக்கு பத்து வாரங்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் இருந்தால், ஆசிரியர்கள் தங்கள் பள்ளி கால அட்டவணைக்கேற்ப காலையோ, மதியமோ நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும். 2,3,4ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு கடந்த 7ம் தேதி சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என மாநில திட்ட இயக்குனரகம் வரையறுத்துள்ளது. அதன்படி, மாவட்டத்துக்கு ஒரு ‘சிம்ப்ளி இங்கிலீஷ்’ ‘சிடி’ வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கேற்ப ‘சிடி’யை நகல் எடுத்து கொடுத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றன.
மின் இணைப்பு மற்றும் ‘டிவிடி’ வழங்கப்பட்ட பள்ளிகளில் ‘சிடி’ நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மின் இணைப்பு இல்லாத பள்ளிகளில், மின் இணைப்பு பெற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us