தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3,150 பேர் ஆட்குறைப்பு: பெப்ஸி பாட்லிங் நிறுவனம் அறிவிப்பு!

3,150 பேர் ஆட்குறைப்பு: பெப்ஸி பாட்லிங் நிறுவனம் அறிவிப்பு!

3,150 பேர் ஆட்குறைப்பு: பெப்ஸி பாட்லிங் நிறுவனம் அறிவிப்பு!


UPDATED : நவ 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்பதன் அடிப்படையில் வட அமெரிக்கா, ஐரோப்பா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் பெப்ஸி பாட்லிங் நிறுவனம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


மெக்ஸிகோவில் மட்டும் 2200 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள மூன்று பாட்டிலிங் ஆலைகளும் 30 விற்பனை மையங்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் கனடாவில் 750 பேரும் ஐரோப்பாவில் 200 பேரும் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் பெப்ஸி பாட்லிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நிலைமைகள் காரணமாக குளிர்பான தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்த நிறுவனத்திற்குக் கிடைத்து வரும் லாபம் குறைந்துள்ளது. பெப்ஸி பாட்லிங் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை பெப்ஸிகோ நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெப்ஸிகோ நிறுவனமும் கோக் நிறுவனமும் சிக்கன நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us