இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஷிப்ட் முறைக்கு ஏ.ஐ.சி.டி.இ., மறுப்பு!
இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஷிப்ட் முறைக்கு ஏ.ஐ.சி.டி.இ., மறுப்பு!
UPDATED : நவ 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பல இன்ஜினியரிங் கல்லூரிகள் ஷிப்ட் முறையைக் கொண்டு வர உத்தேசித்திருந்தன. இதன் மூலம் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியும்.
ஒரு லட்சம் மக்களுக்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு, அது அகில இந்திய சராசரியைவிட குறைவாக இருந்தால், அந்தப் பகுதிகளில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஷிப்ட் முறையில் நான்கு ஆண்டுகளுக்கு வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அனுமதி அளிக்கும். டில்லி, பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மட்டும் ஷிப்ட் முறை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஷிப்ட் முறையைத் தொடங்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் ஏ.ஐ.சி.டி.இ., தெளிவுபடுத்தியுள்ளது.
