கட்டடமின்றி இயங்கும் பள்ளிக் கூடம்: கடலூரில் நிலவும் அவலமிது!
கட்டடமின்றி இயங்கும் பள்ளிக் கூடம்: கடலூரில் நிலவும் அவலமிது!
UPDATED : நவ 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடலூர் அடுத்த கே.என். பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், போதிய கட்டட வசதியில்லாததால், மாணவ மாணவிகள் மரத்தடியில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளியில், 185 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இருந்தும், கட்டட வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரத்தடியிலும், மேல் கூரை உடைந்து வகுப்பறை சுவர் இடிந்த நிலையில் உள்ள இடத்திலும் படிக்கின்றனர். பெஞ்சுகள் இல்லாததால், மரத்தடியில் யூரியா சாக்குகளை போட்டு, அதன்மீது அமர்ந்து படிக்கின்றனர். மழைக் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை தான்.
இப்பள்ளிக்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஐந்து லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிராமக் கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கினால் தான், மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
