கோடை பயிற்சி: அகமதாபாத் ஐ.ஐ.எம். மாணவர்கள் அனைவருக்கும் இடம்!
கோடை பயிற்சி: அகமதாபாத் ஐ.ஐ.எம். மாணவர்கள் அனைவருக்கும் இடம்!
UPDATED : நவ 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், ஐ.ஐ.எம். மாணவர்களுக்கு இந்த அளவுக்கு கோடை கால பயிற்சி வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேனேஜ்மெண்டில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வரும் 300 மாணவர்களுக்கும் அக்ரிகல்ச்சர் பிசினஸ் மேனேஜ்மெண்ட் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் 21 மாணவர்களுக்கும் கோடை கால பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களில் இடம் கிடைத்துள்ளது.
இந்த மாதம் அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேர்ற 117 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்,
அனைத்து மாணவர்களுக்கும் கோடைகால வேலைவாய்ப்பு பணி ஆணைகளை வழங்கியுள்ளன. இதில் 90 மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களிலிருந்து கோடை கால வேலைவாய்ப்பு பணி ஆணை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் முதன் முறையாகப் பங்கேற்ற திட்டகமிஷன், நான்கு மாணவர்களைத் தேர்வு செய்துள்ளது.
இந்த மாணவர்களுக்கு எவ்வளவு பயிற்சித் தொகை வழங்கப்படுகிறது என்பதை ஐ.ஐ.எம். இயக்குநர் சமீர் பரூவா தெரிவிக்க மறுத்துவிட்டார்.
