இலங்கைத் தமிழர் நிதி: பள்ளிக் கல்வித் துறை ரூ.12 கோடி!
இலங்கைத் தமிழர் நிதி: பள்ளிக் கல்வித் துறை ரூ.12 கோடி!
UPDATED : நவ 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இத்தொகைக்கான காசோலையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார். அப்போது பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ரூ5 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 410, தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் ரூ. 6 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரத்து 746, அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் ரூ. 25 லட்சத்து 96 ஆயிரத்து 432, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் ரூ. 20 லட்சத்து 93 ஆயி ரத்து 623, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் சார்பில் ரூ. 36 ஆயிரத்து 628, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் ரூ. 68 லட்சத்து 998, பள்ளிசார கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் ரூ. 12 ஆயிரம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ரூ. 64 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டு மொத்தம் 12 கோடியே 61 லட்சத்து 88 ஆயிரத்து 837 ரூபாய் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையும் சேர்த்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு இதுவரை 38 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 40 ரூபாய் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
