தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னைப் பல்கலை.யில் ஏ.டி.எம். மூலம் கட்டணம் செலுத்தும் வசதி!

சென்னைப் பல்கலை.யில் ஏ.டி.எம். மூலம் கட்டணம் செலுத்தும் வசதி!

சென்னைப் பல்கலை.யில் ஏ.டி.எம். மூலம் கட்டணம் செலுத்தும் வசதி!


UPDATED : நவ 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை செலுத்தி அந்த ரசீதைக் கொண்டு புத்தகங்களை பெற விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
1985ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளின் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்லது. இதனால் பழைய மாணவர்களுக்கு சுலபமாக சான்றிதழ்களை வழங்க முடியும் என்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையில் சைபர் கிரைம் பற்றிய முதுநிலை படிப்புக்கு தமிழக அரசு 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் தரமணி வளாகத்தில் உள்ள விலங்குகள் சோதனை மையத்தை மேம்படுத்த ரூ. 50 லட்சம் வழங்கப்படும். நானோ அறிவியல் ஆய்வகத்துக்கு உபகரணங்கள் வாங்க ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டனில் உள்ள வோர்செஸ்டர் பல்கலைக்கழகத்துடன் சென்னைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை பாலவாக்கத்தில் ரூ. 2.20 கோடியில் கடல் உயிரினங்கள் வளர்ப்பு ஆய்வகம் அமைக்க தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்துடன் சென்னைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us