தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் மீண்டும் ஆர்வம்!

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் மீண்டும் ஆர்வம்!

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் மீண்டும் ஆர்வம்!


UPDATED : நவ 28, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகமான ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்து வந்ததால், ஐ.டி.,துறையே மாணவர்களின் கனவுப் பணியாக இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்தும்கூட, அதில் சேராமல் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் உண்டு. உடனடி வேலைவாய்ப்பையும் நல்ல ஊதியத்தையும் கருதி அவர்களை இந்த முடிவு எடுக்கத் தூண்டியது.
ஆனால், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்ஜினியரிங் படிப்புகளைப் படித்து முடித்த மாணவர்கள்கூட, எம்.பி.ஏ., படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு கேட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதையும் இத்துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதேபோல, எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை படிப்புகளில் சேரவும் இந்த ஆண்டு கடந்த விட கடும் போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்பைப் பெற்ற பல மாணவர்களுக்கு இன்னமும் கூட அழைப்பு ஆணை கிடைக்கவில்லை. எப்போது வேலைக்கு அழைப்பார்கள் என்று தெரியாமல், புதிய வேலைகளில் சேர முடியாமலும் உள்ளனர்.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதில் இன்ஜினியரிங் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று டில்லியில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ்., கோச்சிங் நிறுவனமான வஜிரம் அண்ட் ரவி இன்ஸ்டிட்யூட்டை நடத்தும் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் சிவில் சர்வீஸ் கோச்சிங் எழுத பயிற்சி பெறச் சேர்ந்துள்ள மாணவர்களில் 50 சதவீதம் பேர் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் என்கிறார் அவர்.
இதேபோல ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புக் கடிதம் கிடைத்த பல இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்கள் தற்போது சிவில் சர்வீஸ் கோச்சிங்கில் சேர ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்கள் இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us